நியூஸிலாந்து 260 / 7

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 71 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 71 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 84.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்க 289 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் செüம்யா சர்கார் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் செüதி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, சனிக்கிழமை முதல் இன்னிங்ûஸ தொடங்கிய நியூஸிலாந்தில் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். டாம் லதாம் 68 ரன்கள் விளாசினார். இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 2-ஆவது நாள் முடிவில் 71 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது நியூஸிலாந்து. நிகோலஸ் 56, டிம் செüதி 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட, நியூஸிலாந்து 29 ரன்கள் எடுக்க வேண்டியுள்ள நிலையில் அணியின் வசம் 3 விக்கெட்டுகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com