2-ஆவது டெஸ்டில் நியூஸி. வெற்றி: வங்கதேசம் "ஒயிட் வாஷ்'

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து அணி.இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட
2-ஆவது டெஸ்டில் நியூஸி. வெற்றி: வங்கதேசம் "ஒயிட் வாஷ்'

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து அணி.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூஸிலாந்து அணி, வங்கதேச அணியை "ஒயிட் வாஷ்' ஆக்கியது.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 84.3 ஓவர்களில் 289 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 71 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது.
3-ஆவது நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 4-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 92.4 ஓவர்களில் 354 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்பிறகு முதல் இன்னிங்ஸில் 65 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 52.5 ஓவர்களில் 173 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 109 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டிம் செளதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி சர்வதேச தரவரிசையில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 5 டெஸ்ட் தொடர்களில் 4-இல் எதிரணிகளை "ஒயிட் வாஷ்' ஆக்கியுள்ளது நியூஸிலாந்து.
டிம் செளதி 200 விக்கெட்
இந்தப் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-ஆவது நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார் டிம் செளதி. 56 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார் செளதி. இதன்மூலம் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய நியூஸிலாந்து வீரர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் ரிச்சர்ட் ஹேட்லி
(44 போட்டிகள்) உள்ளார்.
சுருக்கமான ஸ்கோர்

முதல் இன்னிங்ஸ்
வங்கதேசம்-289:
(சர்க்கார் 86, செளதி 5வி/94,
டிரென்ட் போல்ட் 4வி/87)
நியூஸிலாந்து-354:
(நிகோலஸ் 98, டெய்லர் 77, அல்ஹசன் 4வி/50)
2-ஆவது இன்னிங்ஸ்
வங்கதேசம்-173:
(மகமதுல்லா 38, சர்க்கார் 36, போல்ட் 3வி/52, செளதி 3வி/48,
வாக்னர் 3வி/44)
நியூஸிலாந்து-111/1:
(கிராண்ட்ஹோம் 33,
லதாம் 41, ராபி 1வி/21)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com