விம்பிள்டன் டென்னிஸ் : முதல் சுற்றில் முர்ரே, நடால், சைமோனா வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடால், ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோர் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் : முதல் சுற்றில் முர்ரே, நடால், சைமோனா வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடால், ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோர் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீரரான ஆன்டி முர்ரே, ரஷியாவின் அலெக்ஸாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார்.
இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 6- 1, 6- 4, 6- 2 என்ற செட் கணக்கில் முர்ரே வெற்றி பெற்றார். அவர் தனது 2- ஆவது சுற்றில் ஜெர்மனியின் டஸ்டின் பிரெளனை சந்திக்க உள்ளார்.
இதேபோல் மற்றொரு முதல் சுற்றில் ஸ்பெயினின் நடால் 6- 1, 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை வீழ்த்தினார்.
இதனிடையே, இத்தாலியின் மார்கோ செச்சினாட்டோவை எதிர்கொண்ட, உலகின் 9- ஆம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரி 6- 2, 6- 2, 6- 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்றில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட், 6- 3, 6- 1, 6- 2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் ஆண்ட்ரியாஸ் ஹைதரை வீழ்த்தினார்.
இதர முதல் சுற்றுகளில், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், உலகின் 31- ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோவை 2- 6, 7- 6(5), 7- 6(8), 6- 3 என்ற செட் கணக்கில் வென்றார். உலகின் 20- ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ், பிரான்ஸின் பியாரெ ஹியுஜஸ் ஹெ'ர்பர்ட் இடையேயான ஆட்டத்தில் 3- 6, 4- 6, 0- 0 என்ற செட் கணக்கில் ஹெர்பர்ட் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் நிக் கைர்ஜியோஸ் பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார்.
உலகின் 12- ஆம் நிலை வீரரான ஜோ வில்ஃபிரைடு சோங்கா 6- 3, 6- 2, 6- 2 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் கேமரூன் நோரியை வீழ்த்தினார். அமெரிக்காவின் சாம் கெர்ரி, 7- 6(5), 7- 5, 6- 2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் தாமஸ் ஃபாபியானோவை வீழ்த்தினார்.
பிரான்ஸின் பெனாய்ட் பேர், பிரேசிலின் ரொகேரியோ டத்ரா சில்வாவை 6- 4, 3- 6, 7- 6(10), 6- 4 என்ற செட் கணக்கில் வென்றார்.
சைமோனா வெற்றி: இதனிடையே, விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் உலகின் 2- ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் வெற்றி பெற்றார்.
அந்தச் சுற்றில் நியூஸிலாந்தின் மெரினா எராகோவிச்சை சந்தித்தை அவர் 6- 4, 6- 1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்றில் உலகின் 4- ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 7- 5, 7- 6(8) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியை வீழ்த்தினார்.
உலகின் 10- ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸை 7- 6(7), 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் உலகின் 22- ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோவா 6- 3, 6- 3 என்ற செட் கணக்கில் பராகுவேயின் வெரோனிகாவை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com