விம்பிள்டன் டென்னிஸ் : 3- ஆவது சுற்றில் ஃபெடரர், கெர்பர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் தங்களது பிரிவில் 3- ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
லோஜோவிக்கிற்கு லாவகமாக பந்தை திருப்பும் ஃபெடரர்.
லோஜோவிக்கிற்கு லாவகமாக பந்தை திருப்பும் ஃபெடரர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் தங்களது பிரிவில் 3- ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உலகின் 3- ஆம் நிலை வீரரான ஃபெடரர் தனது 2- ஆவது சுற்றில் செர்பியாவின் டுசான் லாஜோவிக்கை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் ஃபெடரர் 7- 6(0), 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் தனது 3- ஆவது சுற்றில் ஜெர்மனியின் மிஸ்கா ùஸவரெவை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தின் உலகின் 6- ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச், 3- 6, 7- 6(7), 6- 4, 7- 5 என்ற செட் கணக்கில் சோவியத் யூனியனின் மிகைல் யூஸ்னியை வீழ்த்தினார். தற்போது ரயோனிச் தனது 3- ஆவது சுற்றில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸை எதிர்கொள்கிறார்.
அதேபோல், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 5- 7, 6- 4, 6- 2, 6- 4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கில்லெஸ் சைமனை வீழ்த்தினார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3- ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட், 6- 4, 7- 6(3), 3- 6, 6- 3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை வீழ்த்தினார். மற்றொரு 3- ஆவது சுற்று ஆட்டத்தில் லக்ஸம்பெர்க்கின் கில்லெஸ் முல்லர் 7- 6(4), 7- 5, 4- 6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேனை வீழ்த்தினார்.
அதேபோல், குரோஷியாவின் மரின் சிலிச் 6- 4, 7- 6(3), 6- 4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தினார். இதையடுத்து சிலிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட்டை எதிர்கொள்கிறார்.
கெர்பர் வெற்றி: இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது 2- ஆவது சுற்றில் பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் ஃப்ளிப்கென்ஸை 7- 5, 7- 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் எஸ்டோனியாவின் அன்னா கோன்டாவிட் 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டரியா கஸாட்கினாவை வீழ்த்தினார்.
இதனிடையே, மகளிர் பிரிவு 3- ஆவது சுற்று ஒன்றில் உலகின் 2- ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6- 4, 7- 6(7) என்ற செட் கணக்கில் சீனாவின் பெங் ஷுவாயை வீழ்த்தினார். அதேபோல், பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா 3- 6, 6- 1, 6- 4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஹீத்தர் வாட்சனை தோற்கடித்தார்.
உலகின் 4- ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6- 1, 7- 5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் கரினா வித்தாஃப்டை வீழ்த்தினார். அதேபோல், உலகின் 5- ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6- 3, 6- 4 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் ஸ்வெட்டனா பிரோன்கோவாவை வீழ்த்தினார்.
போபண்ணா ஜோடி தோல்வி: இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- பிரான்ஸின் எட்வர்டு ரோஜர் வாசெலின் ஜோடியை 7- 6(6), 6- 3, 6- 7(7), 6- 3 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் கென் குப்ஸ்கி- நீல் குப்ஸ்கி ஜோடி வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com