தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்தியா 190 ரன்கள் குவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்தியா 190 ரன்கள் குவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, இந்தியாவின் இன்னிங்ûஸ கேப்டன் விராட் கோலியும், ஷிகர் தவனும் தொடங்கினர்.
சாமுவேல் பத்ரீ வீசிய முதல் ஓவரில் கோலி ஒரு பவுண்டரியையும், தவன் இரு பவுண்டரிகளையும் விளாசினர். டெய்லர் வீசிய அடுத்த ஓவரில் கோலி இரு பவுண்டரிகளையும், தவன் ஒரு பவுண்டரியையும் விரட்டினர். கோலியும், தவனும் தொடர்ந்து வேகம் காட்ட, 5 ஓவர்களில் 54 ரன்களை எட்டியது இந்தியா.
வில்லியம்ஸ் வீசிய 6-ஆவது ஓவரின் முதல் இரு பந்துகளில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசிய கோலி, அடுத்த பந்தில் சுநீல் நரேனிடம் கேட்ச் ஆனார். அவர் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். கோலி-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ரிஷப் பந்த் களமிறங்க, ஷிகர் தவன் 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதன்பிறகு ரிஷப் பந்துடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடி அதிரடியாக ஆட, 11 ஓவர்களில் 105 ரன்களை எட்டியது இந்தியா.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் அரை சதத்தை நழுவவிட்டார். அவர் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்து சாமுவேல்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார். கார்த்திக்-பந்த் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களம்புகுந்த தோனி 2 ரன்களில் நடையைக் கட்ட, ரிஷப் பந்த் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த கேதார் ஜாதவ் 4 ரன்களில் நடையைக் கட்ட, கடைசிக் கட்டத்தில் ஜடேஜா அதிரடியாக ஆடினார். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது இந்தியா. ஜடேஜா 13, அஸ்வின் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர், வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com