விம்பிள்டன் டென்னிஸ்: கெர்பர் வெளியேற்றம்: காலிறுதியில் முர்ரே, சிலிச், முகுருஸா, வீனஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தோல்வி கண்டார்.
பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய கோன்டா.
பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய கோன்டா.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தோல்வி கண்டார்.
அதேநேரத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, குரோஷியாவின் மரின் சிலிச், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் 7-ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்றில் கெர்பர் 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவிடம் தோல்வி கண்டார்.
கடந்த ஆண்டு இறுதிச் சுற்று வரை முன்னேறிய கெர்பர், இந்த முறை காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறியதன் மூலம் தரவரிசையிலும் முதலிடத்தை இழந்துள்ளார்.
முகுருஸா தனது காலிறுதியில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை சந்திக்கிறார். குஸ்நெட்சோவா தனது 4-ஆவது சுற்றில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை தோற்கடித்தார். கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் குஸ்நெட்சோவா.
அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் அனா கொஞ்ஜூவை தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த 23 ஆண்டுகளில் விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீராங்கனை என்ற பெருமையை வீனஸ் பெற்றார். வீனஸ் தனது காலிறுதியில் லாத்வியாவின் ஜெலீனா ஆஸ்டாபெங்கோவை சந்திக்கிறார். ஆஸ்டாபெங்கோ தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 7-6 (6) என்ற நேர் செட்களில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தினார்.
உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 7-6 (3), 6-2 என்ற நேர் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை தோற்கடித்தார். ஹேலப் தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை எதிர்கொள்கிறார். கோன்டா தனது முந்தைய சுற்றில் 7-6 (3), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவை தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த 33 ஆண்டுகளில் விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கோன்டா.
சிலிச், முர்ரே வெற்றி: ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே 7-6 (1), 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பெனாய்ட் பேரை தோற்கடித்தார். இதன்மூலம் விம்பிள்டனில் தொடர்ந்து 10-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் முர்ரே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com