ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் கோலி: 12- ஆவது இடத்தில் தோனி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் தொடருகிறார்.
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் கோலி: 12- ஆவது இடத்தில் தோனி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் தொடருகிறார்.
அந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் மாற்றம் இல்லை.
இதன்படி, பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், இங்கிலாந்தின் ஜோ ரூட், பாகிஸ்தானின் பாபர் ஆஸம் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் மொத்தமாக 154 ரன்கள் எடுத்த தோனி, 3 இடங்கள் முன்னேறி 12- ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அதே தொடரில் 336 ரன்கள் குவித்த அஜிங்க்ய ரஹானே 13 இடங்கள் முன்னேறி 23- ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இது, அவரது தரவரிசை வரலாற்றில் உச்சபட்ச இடம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய மேற்கிந்தியத் தீவுகளின் ஷாய் ஹோப் 20 இடங்கள் ஏற்றம் கண்டு 61- ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
இலங்கை- ஜிம்பாப்வே இடையிலான தொடரை அடுத்து, இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் திக்வெல்லா 7 இடங்கள் முன்னேறி 38- ஆவது இடத்துக்கு வந்துள்ளார். ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராஸா 3 இடங்கள் முன்னேறி 51- ஆவது இடத்துக்கும், ஹாமிஸ்டன் மஸாகட்ஸா 14 இடங்கள் ஏற்றம் கண்டு 57- ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். இலங்கையின் உபுல் தரங்கா 10 இடங்கள் முன்னேறி 64- ஆவது இடத்துக்கும், தனுஷ்கா குணதிலகா 36 இடங்கள் முன்னேறி 70- ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
பந்துவீச்சாளர்கள்: ஐசிசியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்தியர்கள் எவரும் இல்லை.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 6 இடங்கள் முன்னேறி 13- ஆவது இடத்துக்கும், மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் 5 இடங்கள் முன்னேறி 18- ஆவது இடத்துக்கும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 10 இடங்கள் முன்னேறி 20- ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில், ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராஸா 17 இடங்கள் முன்னேறி 10- ஆவது இடத்துக்கும், இந்தியாவின் ஹார்திக் பாண்டியா 22 இடங்கள் முன்னேறி 26- ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com