கனடா ஓபன்: 2-ஆவது சுற்றில் காஷ்யப், பிரணாய்

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்டோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கனடா ஓபன்: 2-ஆவது சுற்றில் காஷ்யப், பிரணாய்

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்டோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் காஷ்யப் 21-11, 21-19 என்ற நேர் செட்களில் பெருவின் டேனியல் ரெகாலை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஜப்பானின் கோகி வடானேப்பை எதிர்கொள்கிறார் காஷ்யப்.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் எச்.எஸ்.பிரணாய் 21-13, 21-15 என்ற நேர் செட்களில் மெக்ஸிகோவின் ஜாப் கேஸ்டில்லோவை வீழ்த்தினார். பிரணாய் தனது 2-ஆவது சுற்றில் ஸ்காட்லாந்தின் கீரன் மெரில்லீஸை சந்திக்கிறார்.
இந்திய வீரர்கள் லக்கானி சரங் 21-9, 17-21, 21-7 என்ற செட் கணக்கில் கனடாவின் யூஜீன் சானையும், அபிஷேக் எலீகர் 21-15, 21-5 என்ற நேர் செட்களில் வியத்நாமின் ஹோங் நாம் நுயெனையும், கரண் ராஜன் 13-21, 21-10, 21-13 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஸ்வோனிமிர் துர்கின்ஜாக்கையும் வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com