இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா 2-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் களம் காண்கிறது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓர் ஆட்டத்தில் விளையாட தடை செய்யப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவுக்குப் பதிலாக டுயான் ஆலிவர் களமிறங்கவுள்ளார். கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் அணிக்கு திரும்பியிருப்பதால் ஜே.பி.டுமினி நீக்கப்பட்டுள்ளார்.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com