இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்போறாங்க தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிசாஸ்திரிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி முதல் ரூ.7.5 கோடி வரை சம்பளமாக வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்போறாங்க தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிசாஸ்திரிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி முதல் ரூ.7.5 கோடி வரை சம்பளமாக வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த  கும்ப்ளே 'திடீர்' என்று அந்த பதவியில் இருந்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக,  முன்னாள் ‘ஆல்-ரவுண்டர்’ ரவிசாஸ்திரியை கடந்த செவ்வாய்க்கிழமை சச்சின், கங்குலி மற்றும் லக்ஷ்மன் அடங்கிய குழு தேர்வு செய்தது.

அத்துடன் ஆண்டுக்கு 150 நாட்கள் என்ற கணக்கில் குறிப்பிட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதே சமயம் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் வினோத் ராய், டியானா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் ஜாகீர்கான், டிராவிட் நியமனத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜாகீர்கானுக்கு பதிலாக பரத் அருணை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்க ரவிசாஸ்திரி விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே அணியின் இதர பணியாளர்கள் ரவிசாஸ்திரியுடன் கலந்து ஆலோசித்து வருகிற 22-ந் தேதி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

அத்துடன் ரவிசாஸ்திரி மற்றும் அணியின் உதவி பணியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குவது என்பது குறித்து நிர்ணயிக்க 4 பேர் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவர் சி.கே.கண்ணா, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி, நிர்வாக கமிட்டி உறுப்பினர் டியானா எடுல்ஜி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்த புதிய கமிட்டியின் முதல் கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த கமிட்டியின் பரிந்துரைகள் 22-ந் தேதி கிரிக்கெட் நிர்வாக கமிட்டியிடம் அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்பொழுது ரவிசாஸ்திரிக்கு ஆண்டு ஒன்றுக்கு ஊதியமாக ரூ.7 கோடியில் இருந்து ரூ.7.5 கோடி வரை சம்பளமாக வழங்கபடலாம் என்ற தகவல்கள் தற்பொழுது ஊடகங்களில் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com