கொழும்பு டெஸ்ட்: ஜிம்பாப்வே 262 ரன்கள் முன்னிலை

இலங்கைக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஜிம்பாப்வே.
2-ஆவது இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஜிம்பாப்வே, சிக்கந்தர் ராஸாவின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 94.4 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் இர்வின் 160 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அணியில் உபுல் தரங்கா 71, கேப்டன் தினேஷ் சன்டிமல் 55 ரன்கள் சேர்த்து வெளியேற, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 83 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது.
இலங்கை 346: மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் ரங்கனா ஹெராத் 22, சுரங்கா லக்மல் 14 ரன்களில் வெளியேற, கடைசி விக்கெட்டாக குணரத்னே 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 102.3 ஓவர்களில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை. ஜிம்பாப்வே தரப்பில் கிரெமர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய ஜிம்பாப்வே அணி, ஹெராத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளானது. சக்கபுவா 6, முஸகன்டா 0, மஸகட்ஸா 7, கிரேக் இர்வின் 5, சீன் வில்லியம்ஸ் 22 ரன்களில் வெளியேற, 17.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஜிம்பாப்வே.
சிக்கந்தர் ராஸா 97*: இதையடுத்து சிக்கந்தர் ராஸாவுடன் இணைந்தார் பீட்டர் மூர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வே சரிவிலிருந்து மீண்டது. சிக்கந்தர் ராஸா 62 பந்துகளில் அரை சதமடிக்க, பீட்டர் மூர் 89 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து சிக்கந்தர் ராஸாவுடன் இணைந்தார் மால்கம் வாலர். பந்தை வீணடிக்காமல் வேகமாக ரன் சேர்த்த வாலர் 54 பந்துகளில் அரை சதம் கண்டார். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது. சிக்கந்தர் ராஸா 158 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 97, வாலர் 76 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர். இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com