வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாளில் தென் ஆப்பிரிக்கா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 94.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாளில் தென் ஆப்பிரிக்கா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 94.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம் அந்த அணி 417 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 96.2 ஓவர்களில் 335 ரன்களும், இங்கிலாந்து 51.5 ஓவர்களில் 205 ரன்களும் சேர்த்தன. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் எல்கர் 80, ஆம்லா 87, டூபிளெஸ்ஸிஸ் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 94.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com