ரவி சாஸ்திரிக்கு ரூ. 8 கோடி சம்பளம்!

இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு ரூ. 6.50 கோடி வருடச் சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில்...
ரவி சாஸ்திரிக்கு ரூ. 8 கோடி சம்பளம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் மேலாளராக 2007- இல் பொறுப்பு வகித்த ரவி சாஸ்திரி, 2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜூன் வரையில் அணியின் இயக்குநர் பொறுப்பில் இருந்தார். தற்போது 2017 முதல் 2019 வரையிலான காலகட்டதிற்கு அணியின் பயிற்சியாளராக இருப்பார்.

இந்நிலையில் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண், உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அணியின் இயன்முறை மருத்துவராக (ஃபிஸியோதெரபிஸ்ட்) பேட்ரிக் ஃபர்ஹாத் தொடர்வார். 2 ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இவர்கள், 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரையில் நீடிப்பார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்நிலையில் பயிற்சியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு ரூ. 6.50 கோடி வருடச் சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில் ரவி சாஸ்திரிக்கு ரூ. 8 கோடி வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல இதர பயிற்சியாளர்கள் வருடத்துக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர் மற்றும் ஊடக வர்ணனையாளர் போன்ற பொறுப்புகளைத் தவிர்த்துவிட்டு அனைவரும் இந்திய அணியில் இணைந்துள்ளதால் இந்தச் சம்பளம் வழங்கப்படுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com