ரவி சாஸ்திரிகளும் கும்ப்ளேகளும் வருவார்கள், போவார்கள்!

ஒரு போட்டியில் கலந்துகொள்ளும்போது உங்கள் மனநிலை சரியாக இருக்கவேண்டும். நல்ல பயிற்சியாளர்கள் அணியில் இருக்கும்போது...
ரவி சாஸ்திரிகளும் கும்ப்ளேகளும் வருவார்கள், போவார்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண், உதவிப் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று கொழும்புக்குப் புறப்பட்டுச் செல்கிறது. இதனையொட்டி இந்திய அணி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றது.

அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: 

ஒரு போட்டியில் கலந்துகொள்ளும்போது உங்கள் மனநிலை சரியாக இருக்கவேண்டும். நல்ல பயிற்சியாளர்கள் அணியில் இருக்கும்போது அது சாத்தியமாகும். அனைத்து வீரர்களிடையேயும் நல்ல மனநிலையை உருவாக்குவது என் கடமை.

பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருண் 15 வருட அனுபவம் கொண்டவர். என்னை விடவும் இந்திய வீரர்களைப் பற்றி அதிகம் அறிந்தவர். கடந்த உலகக் கோப்பையின்போது நாம் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.  

கடந்த இரு வாரங்களாக நான் அதிகப் பக்குவம் அடைந்துள்ளேன். கடந்தமுறை இலங்கைக்குச் சென்றபோதிலிருந்து நான் பக்குவமாகவே உள்ளேன். ரவி சாஸ்திரிகளும் கும்ப்ளேகளும் வருவார்கள், போவார்கள். இந்திய அணியின் தனித்துவம் எப்போதும்போல உயர்ந்த நிலையில் இருக்கும். அணிக்குத்தான் உரிய அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும் என்றார்.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com