அமெரிக்க ஓபன் லீ ஹியூனை வீழ்த்தினார் காஷ்யப்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் லீ ஹியூனுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார் இந்தியாவின்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் லீ ஹியூனுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார் இந்தியாவின் காஷ்யப்.
அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் காஷ்யப் 21-16, 10-21, 21-19 என்ற செட் கணக்கில் லீ ஹியூனை வீழ்த்தினார். காஷ்யப் தனது 2-ஆவது சுற்றில் ஹங்கேரியின் கெர்கீலி கிராவ்ஸை சந்திக்கிறார்.
இந்தியாவின் சமீர் வர்மா தனது முதல் சுற்றில் 21-5, 21-10 என்ற நேர் செட்களில் வியத்நாமின் ஹாங் நம் நுயெனைத் தோற்கடித்தார். அடுத்த சுற்றில் குரோஷியாவின் ஸ்வோனிமிர் துர்கின்ஜாக்குடன் மோதுகிறார் சமீர் வர்மா.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் லூக்கா ராபரை தோற்கடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக அயர்லாந்தின் ஜோஸ்வா மேகியை சந்திக்கிறார் பிரணாய்.
மற்றொரு இந்தியரான ஹர்ஷீல் டேனி 21-13, 21-19 என்ற நேர் செட்களில் மெக்ஸிகோவின் ஆர்டுரோ ஹெர்னான்டஸை தோற்கடித்தார். டேனி தனது 2-ஆவது சுற்றில் வியத்நாமின் டியான் மின் நுயெனுடன் மோதுகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ரிதுபர்ணா தாஸ் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் கனடாவின் ரச்சேல் ஹோன்டெரிச்சையும், ஸ்ரீகிருஷ்ண பிரியா 21-13, 21-16 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மாயா சென்னையும் தோற்கடித்தனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-
சுமீத் ரெட்டி ஜோடி 21-15, 21-19 என்ற நேர் செட்களில் கனடாவின் ஜேசன் அந்தோணி-நைல் யகுரா ஜோடியைத் தோற்கடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடியான பிரான்சிஸ் ஆல்வின்-தருண் கோனா ஜோடி 21-13, 21-10 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் யான் டக் சான்-பிரையன் சி செங் ஜோடியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com