ஏடிபி சேலஞ்சர்: விஷ்ணுவரதன் ஜோடி சாம்பியன்

கஜஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற பிரெஸிடென்ட் கோப்பைக்கான ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணுவரதன்-ஜப்பானின் டோஷிஹைடு மட்சுய் ஜோடி

கஜஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற பிரெஸிடென்ட் கோப்பைக்கான ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணுவரதன்-ஜப்பானின் டோஷிஹைடு மட்சுய் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 7-6 (3), 6-7 (5), 10-7 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஈவ் ஜெனி கர்லோவ்ஸ்கை-ஈவ்ஜெனி டியூர்னெவ் ஜோடியைத் தோற்கடித்தது. இந்த சீசனில் விஷ்ணுவரதன் வென்ற 2-ஆவது ஏடிபி சேலஞ்சர் பட்டம் இது. அதேநேரத்தில் இது, அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற மிகப்பெரிய பட்டமாகும்.
வெற்றி குறித்துப் பேசிய விஷ்ணுவரதன், "இந்த வாரம் வியக்கத்தக்கதாக அமைந்தது. நான் எனது வாழ்க்கையில் வென்ற மிகப்பெரிய பட்டம் இதுதான். நான் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
பயஸ் ஜோடி தோல்வி: அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில் நடைபெற்று வரும் நியூபோர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஆஸ்திரேலியாவின் சாம் குரோத் ஜோடி 6-4, 6-7 (6), 9-11 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் அய்ஸம் உல் ஹக் குரேஷி-
அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடியிடம் தோல்வி கண்டது.
மற்றொரு இந்திய ஜோடியான திவிஜ் சரண்-பூரவ் ராஜா ஜோடி தங்களின் காலிறுதியில் 6-7 (5), 6-7 (4) என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மட் ரெய்ட்- பேட்ரிக் ஸ்மித் ஜோடியிடம் தோல்வி கண்டது.
யூகி பாம்ப்ரி தோல்வி: கனடாவில் நடைபெற்று வரும் கேட்டிநியாவ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி 3-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலெக்சாண்டர் சர்க்கிஸனிடம் தோல்வி கண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com