டிராவில் முடிந்தது இந்தியா-இலங்கை பயிற்சி ஆட்டம்

இந்தியா-இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 55.5 ஓவர்களில் 187 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் குணதிலகா 74, திரிமானி 59 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ராகுல் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரஹானே 40, கேப்டன் கோலி 53, ஷிகர் தவன் 41, ரோஹித் சர்மா 38 ரன்கள் சேர்த்து ரிட்டையர்டு அவுட் (மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பது) முறையில் வெளியேறினர்.
பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா 11, ரவீந்திர ஜடேஜா 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 68 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி. அப்போது விருத்திமான் சாஹா 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதோடு ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.
இலங்கை தரப்பில் பெர்னாண்டோ, கெüஷல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தோனி ஹாட்ரிக் சிக்ஸர்!

டிஎன்பிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிக்ஸர் திருவிழா நடைபெற்றது. அதில் தோனி உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு பெüலிங் யந்திரம் மூலம் தலா 3 பந்துகள் வீசப்பட்டன. அதில் தோனி 3 பந்துகளிலும் சிக்ஸரை விளாசினார். மேத்யூ ஹேடன், பத்ரிநாத், அனிருத்தா ஆகியோர் தலா 2
சிக்ஸர்களையும், பாலாஜி ஒரு சிக்ஸரையும் விளாசினர். மோஹித் சர்மா, பவன் நெகி, தமிழக வீரர் கணபதி ஆகியோர் சிக்ஸர் அடிக்காமல் ஏமாற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com