முன்னாள் ஆஸி. டென்னிஸ் வீரர் பீட்டர் டோஹன் மரணம்

முன்னாள் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் பீட்டர் டோஹன் (56) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சனிக்கிழமை மரணமடைந்தார்.

முன்னாள் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் பீட்டர் டோஹன் (56) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சனிக்கிழமை மரணமடைந்தார்.

பீட்டர் டோஹன் "மோட்டார் நியூரான்' என்ற நோயால் (முதுகுத் தண்டு வடம் மற்றும் மூளையில் உள்ள நரம்புகள் செயலிழப்பது) பாதிக்கப்பட்டிருப்பது 9 வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பீட்டர் டோஹன், 1987}இல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அப்போதைய நடப்பு சாம்பியனான போரீஸ் பெக்கரை வீழ்த்தியதன் மூலம் புகழ் பெற்றார். சர்வதேச தரவரிசையில் அதிகபட்சமாக 43}ஆவது இடத்துக்கு முன்னேறியவரான பீட்டர், 5 ஏடிபி பட்டங்களை வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்காக டேவிஸ் கோப்பை உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் விளையாடி பெருமை சேர்த்த பீட்டரின் மறைவுக்கு ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com