மிதாலி ராஜுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!

மிதாலியின் சாதனைகளுக்குத் தற்போது பல்வேறுவிதமான பரிசுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துவருகின்றன.
மிதாலி ராஜுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!

இந்திய ஜூனியர் அணியின் முன்னால் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த சாமூண்டேஸ்வரநாத், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜுக்கு பிஎம்டபிள்யூ காரைப் பரிசளிக்கவுள்ளார். 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து. அதேநேரத்தில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி, 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.4.25 கோடியும், இரண்டாவது இடம்பிடித்த இந்திய அணிக்கு ரூ.2.12 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

மிதாலியின் சாதனைகளுக்குத் தற்போது பல்வேறுவிதமான பரிசுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துவருகின்றன. இந்திய ஜூனியர் அணியின் முன்னால் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த சாமூண்டேஸ்வரநாத் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் கார்களைப் பரிசாக அளித்துள்ளார். இந்நிலையில், மிதாலி ராஜுக்குத் தற்போது பிஎம்டபிள்யூ காரைப் பரிசளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதற்கு முன்பு 2007-ம் வருடம் மிதாலிக்கு செவ்ரோலெட் காரைப் பரிசளித்துள்ளார். இப்போது அதைவிடவும் பெரிய சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளதால் பிஎம்டபியூ காரைப் பரிசளிக்க முன்வந்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், கோபி சந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார்களைப் பரிசளித்தார் சாமூண்டேஸ்வரநாத். இவர்களுக்கான காரை சச்சின் வழங்கினார். இதேபோல சாய்னா நெவால், காஷ்யப் போன்றவர்களுக்கும் கார்களைப் பரிசளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com