அமெரிக்க ஓபன்: இறுதிச் சுற்றில் காஷ்யப், பிரணாய் மோதல்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் திங்கள்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் மோதுகின்றனர்.
அமெரிக்க ஓபன்: இறுதிச் சுற்றில் காஷ்யப், பிரணாய் மோதல்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் திங்கள்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவின் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் மோதுகின்றனர்.

அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் காஷ்யப் தனது அரையிறுதியில் 15}21, 21}15, 21}16 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் வான் ஹீ ஹியோவைத் தோற்கடித்தார்.
1 மணி, 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த காஷ்யப், பின்னர் அபாரமாக ஆடி அடுத்த இரு செட்களை கைப்பற்றி வெற்றி கண்டார். கடந்த 21 மாதங்களில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் காஷ்யப்.
மற்றொரு அரையிறுதியில் எச்.எஸ்.பிரணாய் 21}14, 21}19 என்ற நேர் செட்களில் வியத்நாமின் டியென் மின் நுயெனை தோற்கடித்தார். கடந்த ஆண்டு ஸ்விஸ் ஓபனில் பட்டம் வென்ற எச்.எஸ்.பிரணாய், அதன்பிறகு இப்போதுதான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
இந்த சீசனில் சர்வதேச பாட்மிண்டன் போட்டி ஒன்றின் இறுதிச்சுற்றில் இந்தியர்கள் இருவர் மோதுவது இது 2}ஆவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனில் இந்தியாவின் ஸ்ரீகாந்தும், சாய் பிரணீத்தும் மோதினர். அதில் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சூப்பர் சீரிஸ் போட்டியில் அவர் தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் மானு அத்ரி}சுமீத் ரெட்டி ஜோடி 12}21, 21}12, 20}22 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சீன தைபேவின் லூ சிங் யாவ்}யங் போ ஹன் ஜோடியிடம் தோல்வி கண்டது.
காஷ்யப்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறித்துப் பேசிய காஷ்யப், "நீண்ட நாள்களுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரையிறுதி ஆட்டம் மிகக் கடினமாக இருந்தது. அரையிறுதியில் என்னை எதிர்த்து விளையாடிய வான் ஹீ ஹியோ ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினார். அதேநேரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு என்னை தகவமைத்துக் கொள்வதற்கு எனக்கு காலஅவகாசம் தேவைப்பட்டது. வான் ஹீ மிக பொறுமையாகவும், அதே நேரத்தில் சரியான ஷாட்களையும் ஆடினார். எனினும் மெதுவாக எனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த நான், இறுதியில் வெற்றி பெற்றேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com