ஐஎஸ்எல்: எடதோடிகா, லிங்டோவுக்கு தலா ரூ.1.1 கோடி

4-ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடருக்கான வீரர்கள் ஒதுக்கீட்டில் அனாஸ் எடதோடிகா, யூஜென்சன் லிங்டோ ஆகியோர் அதிகபட்சமாக தலா ரூ.1.1 கோடிக்கு முறையே ஜாம்ஷெட்பூர் மற்றும்

4-ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடருக்கான வீரர்கள் ஒதுக்கீட்டில் அனாஸ் எடதோடிகா, யூஜென்சன் லிங்டோ ஆகியோர் அதிகபட்சமாக தலா ரூ.1.1 கோடிக்கு முறையே ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தா அணிகளால் வாங்கப்பட்டனர்.
4-ஆவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரும் நவம்பர் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் ஜாம்ஷெட்பூர், பெங்களூர் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. இந்த நிலையில் அனைத்து அணிகளுக்குமான உள்ளூர் வீரர்கள் ஒதுக்கீடு மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் புதிய அணியான ஜாம்ஷெட்பூர் எப்.சி. அனாஸ் எடதோடிகாவை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து அட்லெடிகோ டி கொல்கத்தா அணி யூஜென்சன் லிங்டோவை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது.
அதற்கடுத்ததாக இந்தியாவின் தலைசிறந்த கோல் கீப்பர்களில் ஒருவரான சுப்ரதா பாலை ரூ.87 லட்சத்துக்கு ஜாம்ஷெட்பூர் அணியும், பிரிதாம் கோட்டலை ரூ. 75 லட்சத்துக்கு டெல்லி டைனமோஸ் அணியும் வாங்கின.
சென்னையின் எப்.சி. அணி தாய் சிங் (ரூ.57 லட்சம்), விக்ரமஜித் சிங் (ரூ.53 லட்சம்), தனசந்தனா சிங் (ரூ.50 லட்சம்), ஜெர்மன்பிரீத் சிங் (ரூ.12 லட்சம்), கார்டோஸா (ரூ.30 லட்சம்), பவன் குமார் (ரூ.25 லட்சம்), கீனன் அல்மெய்டா (ரூ.20 லட்சம்), முகமது ராஃபி (ரூ.30 லட்சம்), தனபால் கணேஷ் (ரூ.44 லட்சம்), சஞ்சய் பால்முச்சு (ரூ.8 லட்சம்), பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் (ரூ.20 லட்சம்), ஷாஹின் லால் மெலாலி (ரூ.8 லட்சம்) ஆகியோரை வாங்கியுள்ளது.
95 ஆட்டங்கள்: வீரர்கள் ஒதுக்கீடு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஐஎஸ்எல் தலைவர் நீதா அம்பானி கூறியதாவது: 4-ஆவது சீசன் நீண்டதாக இருக்கும். ஏறக்குறைய 5 மாதங்கள் வரை போட்டி நடைபெறும். இந்த முறை கூடுதலாக இரு அணிகள் பங்கேற்பதால் 95 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த சீசன் நீண்டதாக இருக்கும் என்பதால் அனைத்து அணிகளுக்கும் ஒவ்வொரு ஆட்டத்துக்கு இடையேயும் போதிய காலஅவகாசம் கிடைக்கும். அதனால் வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்கும். அதன் காரணமாக ஒவ்வொரு ஆட்டமும் தரமானதாகவும், ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமையும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேலும் 3 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சராக நீடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்காக ரூ.160 கோடி தருவதற்கு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com