சேவாக் பாணியில் அதிரடி ஆட்டம்: தவன் நிகழ்த்திய சாதனைகள்!

இன்றைய ஆட்டத்தின் மூலமாக சில சாதனைகளையும் ஷிகர் தவன் நிகழ்த்தியுள்ளார்...
சேவாக் பாணியில் அதிரடி ஆட்டம்: தவன் நிகழ்த்திய சாதனைகள்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் அதிரடியாக விளையாடி 190 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேசமயம் 10 ரன்களில் இரட்டைச் சதத்தைத் தவறவிட்டதால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், இலங்கையின் காலே நகரில் இன்று தொடங்கியுள்ளது. அதிரடியான ஆட்டத்தின் மூலம் சதமடித்த தவன், அதன் தொடர்ச்சியாக இரட்டைச் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பவுண்டரி அடிக்கும் வேகத்தில் கேட்ச் கொடுத்து 190 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 168 பந்துகளில் 31 பவுண்டரிகள் விளாசி இந்தியாவுக்கு அமர்க்களமான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலமாக சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். 

ஒரு செசனில் அதிக ரன்கள் (இந்திய வீரர்)

133 சேவாக் vs இலங்கை (3-வது பகுதி)
126 தவன் vs இலங்கை (2-வது பகுதி) 
121 லட்சுமணன் vs ஆஸ்திரேலியா (3-வது பகுதி)

உணவு மற்றும் தேநீர் இடைவேளை சமயத்தில் அதிக ரன்கள் (இந்திய வீரர்)

126 தவன் vs இலங்கை
110 உம்ரிகர் vs மேற்கிந்தியத் தீவுகள்
109 சேவாக் vs பாகிஸ்தான் 
108 சேவாக் vs தென் ஆப்பிரிக்கா

தவனின் டெஸ்ட் செஞ்சுரிகள்

இந்தியாவில் - 12 இன்னிங்ஸ்களில் 1 சதம்
இந்தியாவுக்கு வெளியே - 28 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள்

இலங்கை அணிக்கு எதிராக 4 சதங்கள் எடுத்துள்ளார் தவன். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக 1000 ரன்களை இன்று பூர்த்தி செய்தார். 

இந்தியாவின் இடது கை தொடக்க வீரர்கள் 

கம்பீர் - பதான் vs இலங்கை 2005
கம்பீர் - முகுந்த் vs இலங்கை, 2011
தவன் - முகுந்த் vs இலங்கை, 2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com