டிஎன்பிஎல்: காரைக்குடி வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது காரைக்குடி காளை அணி.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது காரைக்குடி காளை அணி.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணியில் அனிருத்தா ஸ்ரீகாந்த்-விஷால் வைத்யா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவர்களில் 104 ரன்கள் குவித்தது. அனிருத்தா 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் பத்ரிநாத் 12 ரன்களில் நடையைக் கட்ட, விஷால் 51 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் ஷாஜகான் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் சேர்க்க, காரைக்குடி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
மதுரை அணி தோல்வி: பின்னர் பேட் செய்த மதுரை சூப்பர் ஜயன்ட்ஸ் அணியில் ஷாரூக் கான் 39 ரன்களும், சந்திரன் 26 ரன்களும் எடுத்தனர். முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. காரைக்குடி தரப்பில் மோகன் பிரசாத், ராஜ்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com