எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி: ரயில்வே, ஓஎன்ஜிசி அபார வெற்றி

91-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் 2-ஆவது நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் ரயில்வே, ஓஎன்ஜிசி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணிகள் வெற்றி பெற்றன.

91-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் 2-ஆவது நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் ரயில்வே, ஓஎன்ஜிசி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில்
இந்தியன் ரயில்வே அணி 6-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஹாக்கி அணியைத் தோற்கடித்தது. இந்தியன் ரயில்வே அணி தரப்பில் ரஞ்சன் இரு கோல்களையும், அஜ்மீர் சிங், ராஜு பால், மன்பிரீத் சிங், டோப்னோ ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். பெங்களூரு தரப்பில் ரகுநாத், நிலேஷ் ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர்.
ஓஎன்ஜிசி வெற்றி: பின்னர் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணி 7-1 என்ற கோல் கணக்கில் ஹாக்கி ஒடிஸா அணியைத் தோற்கடித்தது. ஓஎன்ஜிசி தரப்பில் திவாகர் ராம் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். நீலம் இரு கோல்களையும், மச்சையா, ஜக்வந்த் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இதையடுத்து நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) அணியைத் தோற்கடித்தது. பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வீரர் சாந்தா சிங் 65-ஆவது நிமிடத்தில் கோலடித்து வெற்றி தேடித்தந்தார்.

இன்றைய ஆட்டங்கள்
மத்திய செகரட்டரியேட்-பஞ்சாப் தேசிய வங்கி
நேரம்: பிற்பகல் 2.30
ராணுவ லெவன்-ஓஎன்ஜிசி
நேரம்: மாலை 4.15
இந்தியன் ரயில்வே-பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
நேரம்: மாலை 6

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com