புரோ கபடி: தமிழ் தலைவாஸை வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி 32-27 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியைத் தோற்கடித்தது.
புரோ கபடி: தமிழ் தலைவாஸை வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி 32-27 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியைத் தோற்கடித்தது.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான தமிழ் தலைவாஸýம், தெலுகு டைட்டன்ஸýம் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தெலுகு டைட்டன்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக அதன் கேப்டன் ராகுல் செளத்ரி தனது அபார ரைடின் மூலம் தமிழ் தலைவாஸ் வீரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தினார். இதனால் தெலுகு டைட்டன்ஸ் 7-4 என முன்னிலை பெற்றது.
எனினும் 12-ஆவது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் மூலம் சரிவிலிருந்து மீண்ட அணி தமிழ் தலைவாஸ் அணி, ஸ்கோரை 8-8 என்ற புள்ளிகள் கணக்கில் சமன் செய்தது. இதன்பிறகு அபாரமாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ், ஒரு நிமிடத்தில் 6 புள்ளிகளைப் பெற, அந்த அணி 14-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதைத் தொடர்ந்து ராகுல் செளத்ரி மேலும் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, முதல் பாதி ஆட்டநேர முடிவில் தெலுகு டைட்டன்ஸ் 18-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் தெலுகு டைட்டன்ஸின் ஆதிக்கம் நீடித்தது. 28-ஆவது நிமிடத்தில் ராகுல் செளத்ரி தனது 10-ஆவது புள்ளியைக் கைப்பற்ற, அந்த அணி 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் வலுவான நிலையை எட்டியது.
35 நிமிடங்களுக்குப் பிறகு தெலுகு டைட்டன்ஸ் அணி 29-19 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் 3 புள்ளிகளைப் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி மோசமான தோல்வியில் இருந்து தப்பியது. இறுதியில் தெலுகு டைட்டன்ஸ் 32-27 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
தெலுகு டைட்டன்ஸ் தரப்பில் ராகுல் செளத்ரி 10 புள்ளிகளை தனது அணிக்கு பெற்றுத்தந்தார். இதன்மூலம் முதல் போட்டியிலேயே "சூப்பர்-10' சாதனையை நிகழ்த்தினார் செளத்ரி. இதன்மூலம் அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
புணே வெற்றி: பின்னர் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் அணி 33-21 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.


தோல்வி ஏன்?

தோல்வி குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறியதாவது: தெலுகு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரியின் ரைடு மிக வேகமாக இருந்தது. அதனால் எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்களால் அவருக்கு ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.
அடுத்த ஆட்டத்தில் தடுப்பாட்டம், தாக்குதல் ஆட்டம் இரண்டிலும் எங்கள் அணியை மேம்படுத்தி சிறப்பாக ஆட முயற்சிப்போம். இதை தோல்வியாக பார்க்காமல் ஓர் அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

தொடக்க விழா

முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தேசிய கீதம் பாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com