கும்ப்ளே-கோலி இடையே மோதல் இல்லை: அமிதாப் செளத்ரி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலி இடையே மோதல் எதுவும் இல்லை. அது முற்றிலும் கட்டுக்கதை என்று
கும்ப்ளே-கோலி இடையே மோதல் இல்லை: அமிதாப் செளத்ரி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலி இடையே மோதல் எதுவும் இல்லை. அது முற்றிலும் கட்டுக்கதை என்று பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் செளத்ரி தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே-விராட் கோலி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பர்மிங்காமில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமிதாப் செளத்ரி, 'கும்ப்ளே-கோலி இடையே மோதல் ஏற்பட்டதாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை. இது முற்றிலும் கட்டுக்கதை. வெறும் ஊகமே' என்றார்.
அதைத் தொடர்ந்து நெருப்பில்லாமல் புகையாதே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த செளத்ரி, 'நான் எந்த புகையையும் பார்க்கவில்லை' என்றார்.
அதைத் தொடர்ந்து நீங்கள் இங்கு வருவதாக எந்த திட்டமும் இல்லை. அப்படியிருக்கையில் திடீரென இங்கு வந்திருப்பது ஏன் என மற்றொரு கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த செளத்ரி, 'என்னுடைய பயண விவரம் குறித்து என்னைவிட நீங்கள் அதிகமாக தெரிந்துவைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது' என்றார்.
பயிற்சியாளர் நியமனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செளத்ரி, 'பிசிசிஐ எப்போதுமே சில நடைமுறைகளை பின்பற்றுகிறது. அதன்படியே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரியிருக்கிறோம். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும்' என்றார்.
இந்திய அணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமிதாப் செளத்ரி, 'சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியினரிடம் அடிக்கடி பேசி வருகிறேன். அவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com