ஐசிசி போட்டிகளில் இந்தியாவிடம் தொடர்ந்து அடிவாங்கும் பாகிஸ்தான்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மட்டும்தான் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளன.
ஐசிசி போட்டிகளில் இந்தியாவிடம் தொடர்ந்து அடிவாங்கும் பாகிஸ்தான்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.  

எட்பாஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் இரு நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது என்பது இரு அணிகளுக்குமே கௌரவ பிரச்னையாகும்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா. அவ்வப்போது மழை மிரட்டியபோதும், இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பதம்பார்க்க தவறவில்லை. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 91, ஷிகர் தவன் 68, கேப்டன் கோலி 81*, யுவராஜ் சிங் 53 ரன்கள் குவித்தனர். பந்துவீச்சில் இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். யுவராஜ் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவுடன் தொடர்ந்து தோல்விகளைப் பெற்றுவருகிறது பாகிஸ்தான் அணி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மட்டும்தான் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளன. மற்றபடி உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை.

இதுவரையிலான ஐசிசி போட்டிகளில் இந்திய அணி 13 வெற்றிகளையும் பாகிஸ்தான் 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

ஐசிசி போட்டிகள்

50 ஓவர் உலகக்கோப்பை: இந்தியா 6, பாகிஸ்தான் 0 
டி20 உலகக்கோப்பை: இந்தியா 5, பாகிஸ்தான் 0
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா 2, பாகிஸ்தான் 2 (2004, 2009-இல் நடைபெற்ற ஆட்டங்களில் பாகிஸ்தானும், 2013 மற்றும் நேற்றைய போட்டிகளில் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com