விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை நெருங்கும் ஷிகர் தவன்!

ஷிகர் தவன் 125 ரன்கள் குவித்தபோதும், இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது...
விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை நெருங்கும் ஷிகர் தவன்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை. ஷிகர் தவன் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தபோதும், இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.

ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவன் அடித்த 10-வது சதமாகும். இதன்மூலம் அதிவேகமாக 10 சதங்கள் (77 இன்னிங்ஸ்) அடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்தார். அதிவேக 10 சதங்கள் எடுத்த அடுத்த இந்திய வீரர் விராட் கோலி. அவர் 80 இன்னிங்ஸ்களில் 10 சதங்களைப் பூர்த்தி செய்தார். 

இதுதவிர இங்கிலாந்து மண் ஷிகர் தவனுக்கு ராசியாக அமைந்துள்ளது. அங்கு விளையாடிய ஒருநாள் போட்டியில் 79 ரன்களைச் சராசரியாகக் கொண்டுள்ளார் தவன். இங்கிலாந்தில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த வெளிநாட்டு வீரர்களில் ஷிகர் தவன் தான் அதிக சராசரிகளைக் கொண்டுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் மேற்கிந்திய வீரரும் கிரிக்கெட் பிரபலமுமான ரிச்சர்ட்ஸ் உள்ளார். தவன் 11 ஆட்டங்களில் 711 ரன்கள் எடுத்து 79 சராசரியைக் கொண்டுள்ளார். ரிச்சர்ட்ஸ் 31 ஆட்டங்களில் 1345 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 64.04. 

இங்கிலாந்தில் அதிக சதம் எடுத்த வெளிநாட்டு வீரர்களில் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் உள்ளார். ரிச்சர்ட்ஸ் நான்கு சதங்கள் எடுத்துள்ளார். இரண்டாம் இடத்தில் 3 சதங்களுடன் தவன் உள்ளார். சச்சினும் இங்கிலாந்தில் விளையாடிய 26 ஒருநாள் ஆட்டங்களில் 3 சதங்கள் எடுத்துள்ளார். இதனால் ரிச்சர்ட்ஸின் சாதனையை தவன் விரைவில் மிஞ்சுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com