சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம்: இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவையில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம்: இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவையில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோலி கூறியதாவது:
இதுவரை நாங்கள் சிறப்பாகவே ஆடி வந்திருக்கிறோம். அதேபோன்றதொரு ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராகவும் வெளிப்படுத்த முயற்சிப்போம். அந்த அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கேற்றவாறு நாங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளோம்.
போட்டியின்போது நாங்கள் எங்களின் கிரிக்கெட் அறிவு மற்றும் ஆற்றல் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இது சாத்தியமானால் வெற்றி கிடைக்கும் என்றார்.
வங்கதேசத்தை 9 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த கோலி, 'உண்மையை சொல்வதானால், அதுபோன்று எதையும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு போட்டியில் களமிறங்குகிறபோது, நீங்கள் நல்ல மனநிலையில் இல்லாவிட்டால், அதில் சதமடித்தாலோ அல்லது உங்கள் அணி வெற்றி பெற்றாலோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால் சில நேரங்களில் நீங்கள் டக் அவுட்டானாலும்கூட, அந்த ஆட்டத்தில் அணி வெற்றி பெறும்போது உங்களுக்குள் மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும். இப்படித்தான் கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அழகு.
இறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ரசித்து விளையாட விரும்புகிறோம். அதற்கு நாங்கள் தகுதியானவர்கள். இதுவரையில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம். அதற்காக நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோமா அல்லது ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோமா என்பது ஒரு விஷயம் அல்ல. நாங்கள் கடந்த ஆட்டங்களில் விளையாடியதைப் போன்றே பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் விளையாட முயற்சிப்போம். ஓர் அணியாக இ'ணைந்து செயல்படுகிறபோது வெற்றி தானாகவே வரும் என நம்புகிறோம்' என்றார்.
பாகிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்துப் பேசிய கோலி, 'பாகிஸ்தானின் ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அவர்கள் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறார்கள். இறுதி ஆட்டத்துக்கு முன்னேற வேண்டுமானால், அதற்கு நன்றாக விளையாட வேண்டும். அந்த வகையில் பாகிஸ்தானை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் அபாரமாக ஆடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள்' என்றார்.

*இறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ரசித்து விளையாட விரும்புகிறோம். அதற்கு நாங்கள் தகுதியானவர்கள். இதுவரையில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம்.
அதற்காக நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com