பாகிஸ்தானுக்கு ரூ. 14 கோடி; இந்தியாவுக்கு ரூ. 7 கோடி!

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 29 கோடியாகும். கோப்பையை வென்ற பாகிஸ்தானுக்கு...
பாகிஸ்தானுக்கு ரூ. 14 கோடி; இந்தியாவுக்கு ரூ. 7 கோடி!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 29 கோடியாகும். கோப்பையை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ.14 கோடியும், இறுதிச் சுற்றில் தோற்ற இந்தியாவுக்கு ரூ.7 கோடியும் பரிசாக வழங்கப்பட்டன.

அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு தலா ரூ. 3 கோடியும், குரூப் சுற்றின் முடிவில் 3-ஆவது இடம்பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ரூ. 58 லட்சமும், 4-ஆவது இடத்தைப் பிடித்த நியூஸிலாந்து, இலங்கை அணிகளுக்கு ரூ. 39 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com