மாநில ஜூனியர் கூடைப்பந்து: திருநெல்வேலி, சென்னை அணிகள் சாம்பியன்

கோவையில் நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோருக்கான (ஜூனியர்) மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் திருநெல்வேலி அணியும்,
திருநெல்வேலி அணிக்கு கோப்பையை வழங்குகிறார் தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் வி.வி.ராஜ் சத்யன்.
திருநெல்வேலி அணிக்கு கோப்பையை வழங்குகிறார் தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் வி.வி.ராஜ் சத்யன்.

கோவையில் நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோருக்கான (ஜூனியர்) மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் திருநெல்வேலி அணியும், மகளிர் பிரிவில் சென்னை 1 மண்டல அணியும் பட்டம் வென்றன.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டிகள் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கின. இந்தப் போட்டியின் 5-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், ஆடவர் அரையிறுதியில் திருநெல்வேலி 82-71 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை 2 மண்டல அணியையும், திருவள்ளூர் மாவட்ட அணி 56-45 என்ற புள்ளிக் கணக்கில் மதுரை மாவட்ட அணியையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றன.
பின்னர் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திருநெல்வேலி அணி 87-85 என்ற புள்ளிக் கணக்கில் திருவள்ளூர் மாவட்ட அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. ஆடவர் பிரிவில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மதுரை மாவட்ட அணி 74-59 புள்ளிக் கணக்கில் சென்னை 2 மண்டல அணியை வீழ்த்தியது.
மகளிர் பிரிவு: மகளிருக்கான அரையிறுதியில் சென்னை 2 மண்டல அணி 71-62 என்ற புள்ளிக் கணக்கில் தஞ்சை அணியையும், சென்னை 1 மண்டல அணி 63-59 என்ற புள்ளிக் கணக்கில் நாகை அணியையும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இறுதி ஆட்டத்தில் சென்னை 1 மண்டல அணி 64-55 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை 2 மண்டல அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. முன்னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் நாகை அணி 58-28 என்ற புள்ளிக் கணக்கில் தஞ்சை அணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com