இந்திய ஹாக்கி அணிக்கு விஜய் கோயல் வாழ்த்து

உலக ஹாக்கி லீக் அரையிறுதியின் குரூப் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கும், இந்தோனேசிய சூப்பர் சீரிஸ்
இந்திய ஹாக்கி அணிக்கு விஜய் கோயல் வாழ்த்து

உலக ஹாக்கி லீக் அரையிறுதியின் குரூப் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கும், இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது.
இதையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கோயல், மேலும் கூறியிருப்பதாவது: இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.
இதேபோல் இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்துக்கும் வாழ்த்துகள். சூப்பர் சீரிஸ் பிரிமீயர், சூப்பர் சீரிஸ், கிராண்ட்ப்ரீ கோல்டு ஆகிய 3 பாட்மிண்டன் போட்டிகளிலும் பட்டம் வென்ற ஒரே இந்தியர் ஸ்ரீகாந்த் மட்டுமே. அவரை நான் மட்டுமல்ல, இந்த நாடே வாழ்த்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com