ஐசிசி கனவு அணியில் மூன்று இந்திய வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐசிசி சார்பில் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி கனவு அணியில் மூன்று இந்திய வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐசிசி சார்பில் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் கேப்டனாக பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து விராட் கோலி, ஷிகர் தவன், புவனேஸ்வர் குமார் ஆகியோரும், பாகிஸ்தானில் இருந்து 4 பேரும், இங்கிலாந்தில் இருந்து 3 பேரும், வங்கதேசத்தின் சார்பில் தமிம் இக்பாலும் இடம்பெற்றுள்ளனர். நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 12-ஆவது வீரராக இடம்பெற்றுள்ளார். ஷிகர் தவனும், ஃபகார் ஸமானும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி கனவு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சர்ஃப்ராஸ் அஹமது, 'இந்த தலைமுறையின் ஆகச்சிறந்த வீரர்கள் அடங்கிய அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த கெளரவம் ஆகும். இதுதவிர பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபகார் ஸமான், ஹசன் அலி உள்ளிட்ட வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
 

அணி விவரம்: ஷிகர் தவன் (இந்தியா), ஃபகார் ஸமான் (பாகிஸ்தான்), தமிம் இக்பால் (வங்கதேசம்), விராட் கோலி (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), சர்ஃப்ராஸ் அஹமது (பாகிஸ்தான்), ஆதில் ரஷித் (இங்கிலாந்து), ஜுனைத் கான் (பாகிஸ்தான்), புவனேஸ்வர் குமார் (இந்தியா), ஹசன் அலி (பாகிஸ்தான்), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து, 12-ஆவது வீரர்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com