செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

* லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்புமிக்க கோல்களை அடித்தது மனநிறைவு அளிப்பதாக இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் தெரிவித்துள்ளார்.
* சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நானோ அல்லது ஆஸ்திரேலிய அணியோ டாஸ் வென்றால், அதில் பேட்டிங்கை தேர்வு செய்து, பெரிய அளவிலான ஸ்கோரை குவித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிப்போம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
* சீனாவில் நடைபெற்று வரும் 'பிரிக்ஸ்' ஊஷூ விளையாட்டுப் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி இரண்டு தங்கம் உள்பட மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.
* லண்டனில் நடைபெற்று வரும் குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் அமெரிக்காவின் டொனால்டு யங்கிற்கு எதிராக விளையாடியபோது ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான நிக் கிர்ஜியோஸுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போட்டியிலிருந்து விலகினார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திலிருந்து சமீபத்தில் மீண்ட கிர்ஜியோஸுக்கு இப்போது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com