கொட்டும் பரிசுமழை: ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொட்டும் பரிசுமழை: ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். கோப்பையை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ.14 கோடியும், இறுதிச் சுற்றில் தோற்ற இந்தியாவுக்கு ரூ.7 கோடியும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சாம்பியன் ஆனதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளார்கள். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 கோடி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

மேலும் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்குக் கூடுதலாக போனஸும் வழங்கப்படவுள்ளது. ரூ. 2.9 கோடியை வீரர்களுக்குச் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுதவிர ஒருநாள் போட்டியில் அணிக்கு வெற்றி தேடித்தந்ததால் 
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அஹமது நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்ததைத் தொடர்ந்து, ஒரு நாள் போட்டியின் கேப்டனான சர்ஃப்ராஸுக்கு டெஸ்ட் கேப்டன் பதவியை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com