பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் தோற்றால் போரில் தோற்றதாக அர்த்தம் இல்லை: சானியா மிர்சா

இரு நாடுகளுக்கு இடையே உள்ள பகைமை உணர்வைக் கொண்டு இதைப் பார்க்கக்கூடாது...
பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் தோற்றால் போரில் தோற்றதாக அர்த்தம் இல்லை: சானியா மிர்சா

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியைத் தோற்கடித்து பாகிஸ்தான் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது சானியா மிர்சா இந்திய அணி தோல்வி குறித்து ட்வீட் வெளியிட்டார். இதனால் கணவரும் பாகிஸ்தான் வீரருமான சோயிப் மாலிக்குக்கு ஆதரவான நிலை எடுக்கிறார் என அவரைச் சமூகவலைத்தளத்தில் பலரும் விமரிசனம் செய்தார்கள். 

இதுகுறித்து ஒரு பேட்டியில் சானியா மிர்சா கூறியதாவது:

என் கணவர் சாம்பியன்ஸ் டிராபியில் ஆடும்போது அவருக்கு ஆதரவாக இருந்தேன். அவர் விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்தேன். இரு நாடுகளுக்கு இடையே உள்ள பகைமை உணர்வைக் கொண்டு இதைப் பார்க்கக்கூடாது. என் கணவருக்கு ஆதரவாக உள்ளேன். அதேசமயம் இந்திய அணிக்கும் என் ஆதரவைத் தெரிவிக்கிறேன். 

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்போது நானும் அவரும் ஆளுக்கொரு கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு மோதிக்கொள்ளமாட்டோம். இதை விளையாட்டாக மட்டுமே பார்க்கவேண்டும். இந்தக் கருத்தையே ஒவ்வொரு விளையாட்டு வீரனும் வெளிப்படுத்த விரும்புகிறான். பாகிஸ்தானுடன் இந்தியா தோற்றால் அது விளையாட்டில் மட்டுமே. இந்தியா ஒன்றும் போரில் தோற்கவில்லை. 

சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிந்தபிறகு என் கணவர் சோயிப் மாலிக் - யுவ்ராஜ் சிங் மற்றும் கோலியுடன் பேசிக்கொண்டிருந்ததைத் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். அதுதான் விளையாட்டு உணர்வு என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com