‘பாஸ்’ விராட் கோலிக்குப் பயிற்சியாளர் தேவையில்லை: பிரபல முன்னாள் வீரர் சாடல்!

எதற்காக பயிற்சியாளரை வீணாக நியமிக்க வேண்டும்? இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள்கூட தேவையில்லை...
‘பாஸ்’ விராட் கோலிக்குப் பயிற்சியாளர் தேவையில்லை: பிரபல முன்னாள் வீரர் சாடல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். 

கேப்டன் விராட் கோலிக்கும், எனக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே பதவியை ராஜிநாமா செய்தேன் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரப்பள்ளி பிரசன்னா கூறியதாவது: 

கோலி தன்னை பாஸ் என நினைத்தால் அவருக்குப் பயிற்சியாளரே தேவையில்லை. எதற்காக பயிற்சியாளரை வீணாக நியமிக்கவேண்டும்? இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள்கூட (சஞ்சய் பங்கர் & ஆர். ஸ்ரீதர்) தேவையில்லை என நினைக்கிறேன். 

கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் அவர் நல்ல கேப்டனா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. அனில் கும்ப்ளே போன்ற ஒரு வீரருக்கே மரியாதை இல்லை என்றால் சஞ்சய் பங்கர் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும் கோலியுடன் எப்படி தன்னம்பிக்கையுடன் விவாதிப்பார்கள்? இருவருக்குமே கும்ப்ளே அளவுக்கு அனுபவம் கிடையாது.

வலைப்பயிற்சிக்கு ஏற்ற பயிற்சியாளரை மட்டுமே தேர்வு செய்யுங்கள். அதுவே போதும். ஒரு கேப்டனின் நடத்தை இந்தளவுக்கு இருந்தால் அவருக்குப் பயிற்சியாளரே தேவையில்லை. 

பயிற்சியாளருக்கான பொறுப்பையும் கோலியே ஏற்றுக்கொண்டால் முந்தைய காலம் போல அணிக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் மேலாளர் மட்டுமே போதும் என்று கோலியை பிரசன்னா கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com