ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த் 15-21,
21-13, 21-13 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை தோற்கடித்தார். கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபனின் அரையிறுதியிலும் சன் வான் ஹோவை ஸ்ரீகாந்த் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் சாய் பிரணீத்துடன் மோதுகிறார். சாய் பிரணீத் தனது முந்தைய சுற்றில் 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுயாங் யூக்ஸியாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் பி.வி.சிந்து 21-13, 21-18 என்ற நேர் செட்களில் சீனாவின் சென் ஸியாக்ஸினை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீன தைபேவின் தாய் ஜு இங்கை எதிர்கொள்கிறார் சிந்து.
சாய்னா தனது 2-ஆவது சுற்றில் 21-15, 20-22, 21-14 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோனியை வீழ்த்தினார். சாய்னா தனது காலிறுதியில் சீனாவின் சன் யூவை சந்திக்கிறார்.
மகளிர் இரட்டையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 21-18, 18-21, 13-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஷிபோ டனாக்கா-கோஹாரு யோனேமோட்டோ ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com