டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.
இங்கிலாந்தின் செளதாம்ப்டன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களான ஸ்முட்ஸ் ரன் ஏதுமின்றியும், ஹென்ரிக்ஸ் 3 ரன்களிலும், டேவிட் மில்லர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 4.1 ஓவர்களில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து கேப்டன் டிவில்லியர்ஸூடன் இணைந்தார் பெஹார்டியன். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. டிவில்லியர்ஸ் 58 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 65, பெஹார்டியன் 52 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து வெற்றி: பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேன் ராய்-அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ராய் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதையடுத்து ஹேல்ஸூடன் இணைந்தார் ஜானி பேர்ஸ்டோவ். இந்த ஜோடி அதிரடியாக ஆட, 14.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது இங்கிலாந்து.
ஜானி பேர்ஸ்டோவ் 35 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60, அலெக்ஸ் ஹேல்ஸ் 38 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com