இந்தியா- மே.இ.தீவுகள் 2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா- மே.இ.தீவுகள் 2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-ஆவது ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டமும் கைவிடப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பெüலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரஹானே 62, ஷிகர் தவன் 87 ரன்கள் குவித்து அசத்தினர். எனவே இந்த ஆட்டத்திலும் அவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஆனால் இவர்களில் யுவராஜ் சிங் பெரிய அளவில் ரன் குவிக்காதது கவலையளிப்பதாக உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 29 பந்துகளில் அரை சதம் விளாசிய யுவராஜ் சிங், அதன்பிறகு இலங்கைக்கு எதிராக 7 ரன்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 23 ரன்களும், சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 22 ரன்களும் மட்டுமே எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் அவர் 4 ரன்களில் நடையைக் கட்டினார். ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் யுவராஜ் சிங்கின் இடத்தில் களமிறங்க தயாராக இருந்தபோதிலும் அவர்களுக்கு இதுவரை வாய்ப்பளிக்கப்படவில்லை. எனினும் இந்த ஆட்டத்தில் கோலி எந்த மாற்றமும் செய்ய விரும்பமாட்டார். அதனால் யுவராஜ் சிங்கே ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் கூட்டணியும் பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் குல்தீப் யாதவ் கடந்த ஆட்டத்தில் அணியில் இடம்பெற்றாலும், மழை காரணமாக பந்துவீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இந்த ஆட்டத்திலும் அவர் இடம்பெறுவார். அதனால் ஜடேஜாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் இவின் லீவிஸ், பாவெல், ஷாய் ஹோப், ஜொனாதன் கார்ட்டர், ரோஸ்டான் சேஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஆனால் இவர்களில் யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்காதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் மிக்கேல் கம்மின்ஸ், அல்ஜாரி ஜோசப் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் தேவேந்திர பிஷுவையும் நம்பியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.
இந்தியா (உத்தேச லெவன்): அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, அஸ்வின், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.
மே.இ.தீவுகள் (உத்தேச லெவன்): இவின் லீவிஸ், கிரன் பாவெல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஜொனாதன் கார்ட்டர், ஜேசன் முகமது, ரோஸ்டான் சேஸ், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ், அல்ஜாரி ஜோசப், தேவேந்திர பிஷு, மிக்கேல் கம்மின்ஸ்.

முதல் ஆட்டத்தில் வென்றது மழை

போர்ட் ஆப் ஸ்பெயினில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தபோது 2-ஆவது முறையாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு மழை தொடர்ந்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரஹானே 62 ரன்களும், ஷிகர் தவன் 87 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கோலி 32, தோனி 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com