டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கார்டிஃபில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மாலன் 44 பந்துகளில் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 36 ரன்களும், ஜோஸ் பட்லர் 31 ரன்களும் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பேட்டர்சன் 4 விக்கெட்டுகளையும், பெலுக்வாயோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா தோல்வி: பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 0, கிறிஸ் மோரீஸ் 8, ஸ்மட்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் டிவில்லியர்ஸ் 19 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
இதன்பிறகு மோஸ்லே 22 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தபோதும், அவருக்குப் பக்கபலமாக பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஆடவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளையும், கரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டேவிட் மாலன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com