ரஹானேவுக்கு கோலி பாராட்டு!

அஜிங்க்ய ரஹானே இடம்பெறும்போது இந்திய அணி சமபலம் கொண்டதாக இருக்கிறது. அதனால் கூடுதல் பெளலருடன் களமிறங்க முடியும் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அஜிங்க்ய ரஹானே இடம்பெறும்போது இந்திய அணி சமபலம் கொண்டதாக இருக்கிறது. அதனால் கூடுதல் பெளலருடன் களமிறங்க முடியும் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதில் சதமடித்த ரஹானேவைப் பாராட்டிய கோலி மேலும் கூறியதாவது: ரஹானே, சில காலமாக இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். முன்வரிசையில் களமிறங்கி பெரிய அளவில் ரன் குவிக்கக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. அவர் எப்போதுமே எங்கள் அணியின் மாற்று தொடக்க வீரராக திகழ்கிறார்.
இந்தத் தொடரின் இரு ஆட்டங்களிலுமே ரஹானே சிறப்பாக பேட் செய்தார். தலைசிறந்த டெஸ்ட் பந்தய வீரரான ரஹானே, இப்போது ஒரு நாள் போட்டியிலும் முத்திரை பதித்து வருகிறார். அவர் நெருக்கடியை எளிதாக கையாள்வதோடு, ஆட்டத்தை ரசித்து விளையாடுகிறார்.
மிடில் ஆர்டரிலும் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்கக் கூடியவராக இருக்கிறார் ரஹானே. அதனால் 2019 உலகக் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளில் இந்திய அணி கூடுதல் பெளலருடன் களமிறங்கும் வாய்ப்பு ஏற்படும். கிரிக்கெட்டில் இரட்டை பங்களிப்பு செய்யக்கூடியவர்கள் மிகவும் அரிதுதான். ரஹானேவால் தொடக்க வீரராக மட்டுமின்றி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் களமிறங்க முடிகிறது என்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவைப் பாராட்டிய கோலி, "குல்தீப் யாதவின் பந்துவீச்சு இரு புறமும் சுழலக்கூடியதாகும். அவருடைய பந்துவீச்சை நான் ஐபிஎல் போட்டியின்போது எதிர்கொண்டுள்ளேன். இந்த ஆட்டத்தில் அவர் பந்துவீசிய விதத்திற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com