இரட்டைப் பட்டங்களுக்கான போட்டி: சீன வீரரை எதிர்கொள்கிறார் விஜேந்தர் சிங்

தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் இரட்டைப் பட்டங்களை கைப்பற்றுவதற்கான மோதலில் இந்திய வீரரான விஜேந்தர் சிங், சீன வீரரான ஸூல்பிகர் மாய்மைடியாலியை எதிர்கொள்கிறார்.

தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் இரட்டைப் பட்டங்களை கைப்பற்றுவதற்கான மோதலில் இந்திய வீரரான விஜேந்தர் சிங், சீன வீரரான ஸூல்பிகர் மாய்மைடியாலியை எதிர்கொள்கிறார்.

இந்தப் போட்டிக்கான அறிவிப்பு மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இப்போட்டியைப் பொறுத்த வரையில் வெற்றி பெறும் நபர் தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதுடன், தோல்வியடைந்த நபரின் பட்டத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
இப்போட்டி மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள என்எஸ்சிஐ விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 5}ஆம் தேதி நடைபெறவுள்ளது.
டபிள்யூபிஓ ஆசிய பசிபிக் மிடில்வெயிட் சாம்பியனான விஜேந்தர் சிங், இதுவரை மோதிய 8 போட்டிகளில் தோல்வியின்றி தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதில் 30 சுற்றுகளும், 7 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும். டபிள்யூபிஓ ஒரியண்டல் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனான ஸýல்பிகரும் 8 போட்டிகளில் தோல்வியின்றி வெற்றியை பதிவு செய்துள்ளார். அதில் 24 சுற்றுகளும், 5 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும்.
இந்தப் போட்டிக்கான முதல் டிக்கெட்டை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து விஜேந்தர் சிங் வழங்கியுள்ளார்.
இதனிடையே, இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அகில் குமார், ஜிதேந்தர் குமார், நீரஜ் காயத், பர்தீப் காரேரா, தர்மேந்தர் கிரேவால், குல்தீப் தன்டா ஆகியோர் களம் காண உள்ளனர். இதில் அகில் குமார் தொழில்முறை போட்டியில் பங்கேற்பது முதல் முறையாகும். இந்த வீரர்களுக்கான போட்டியாளர்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், போட்டி குறித்து பேசிய விஜேந்தர் சிங், "ஸூல்பிகருக்கு எதிரான போட்டிக்கு தயாராக உள்ளேன். அவர் ஒரு சிறிய குழந்தை. என்னை நாக் அவுட் செய்வதாக அவர் கூறியது நகைச்சுவையாக உள்ளது. அவருக்கு எதிராக எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com