டி20 தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு பும்ரா முன்னேற்றம்

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேவேளையில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் முதல் 3 இடங்களில் மாற்றம் இல்லை. வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்திலேயே தொடருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்து, 3}ஆவது இடத்துக்கு வந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் இமத் வாசிம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். தனது கிரிக்கெட் வரலாற்றில் இமத் வாசிம் முதலிடத்துக்கு வருவது இது முதல் முறையாகும்.
பேட்ஸ்மேன் பட்டியலில், கோலியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் 2}ஆவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 3}ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் விளாசிய தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 12 இடங்கள் முன்னேறி, 20}ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சக நாட்டவரான ஜேசன் ராய் 26 இடங்கள் முன்னேறி, தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 25}ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
அணிகள்: டி20 அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து 123 புள்ளிகளுடன் 2}ஆவது இடத்துக்கு வந்துள்ளது. 125 புள்ளிகளுடன் நியூஸிலாந்து முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 110 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com