ஏகான் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரரும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான நோவக்
ஏகான் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரரும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற 2-ஆவது சுற்றில் கனடாவின் வாùஸக் போஸ்பிஸிலை எதிர்கொண்ட அவர், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். போஸ்பிஸிலை இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள ஜோகோவிச் அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பிறகு ஜோகோவிச், "இந்த ஆண்டில் புல் தரையில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும். இருப்பினும், இந்த ஆட்டத்தை சிறப்பாக உணர்கிறேன். புல் தரையில் சிறப்பாக ஆடக் கூடிய ஒருவருக்கு (போஸ்பிஸில்) எதிராகவே வெற்றி பெற்றுள்ளேன். ஆகவே இந்த வெற்றிக்காக சந்தோஷம் கொள்கிறேன்" என்றார்.
இந்நிலையில், ஆடவர் பிரிவின் முதல் சுற்றுகளில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சாம் கெர்ரியை வீழ்த்தினார். ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரெவ் 6-4, 7-6(9) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ரையான் ஹாரிûஸயும், இத்தாலியின் தாமஸ் ஃபாபியானோ 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் ஃபிராங்கோ ஸ்குகோரையும் வீழ்த்தினர்.
கெர்பர் வெற்றி: இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது 2-ஆவது சுற்றில் 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிலிஸ்கோவாவை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் டுவான் யிங் யிங்கை வீழ்த்தினார். இதர ஆட்டங்களில், ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்நெட்சோவா 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மோனா பார்தெலையும், ரஷியாவின் எலினா வெஸ்னினா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பராகுவேயின் வெரோனிகாவையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com