மூன்றாவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றி பெறுமா இந்தியா?: இன்று மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதல்

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையேயான ஒருநாள் தொடரின் 3-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது.
ஆன்டிகுவாவில் வியாழக்கிழமை பயிற்சியில் இந்திய வீரர் தோனி.
ஆன்டிகுவாவில் வியாழக்கிழமை பயிற்சியில் இந்திய வீரர் தோனி.

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையேயான ஒருநாள் தொடரின் 3-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது.
மொத்தம் 5 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் இதுவரை 2 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட, 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, 2-ஆவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்தியாவும், முதல் வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் இந்த 3-ஆவது ஆட்டத்தில் களம் காணுகின்றன.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்த வரையில், அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன், விராட் கோலி ஆகியோர் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சிதறடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக, ரஹானே கடந்த ஆட்டத்தில் சதம் விளாசியதைப் போல், இந்த ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பலாம்.
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் அனுபவமிக்க தோனி, யுவராஜ் தங்களது பங்களிப்பை வழங்க உள்ளனர். இவர்கள் தவிர, ஹார்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களும் பேட்டிங்கில் பலம் காட்ட உள்ளனர்.
பந்துவீச்சைப் பொருத்த வரையில், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் வேகப்பந்து வீச்சால் மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்க உள்ளனர். சுழற்பந்துவீச்சால் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் விக்கெட்டுகளை சாய்க்க வருகின்றனர்.
இந்திய அணியைப் பொருந்த வரையில் தற்போது பலவீனமான, அனுபவமில்லாத வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொண்டுள்ள போதிலும், தொடரை கைப்பற்றுவது முக்கியமாகும். இதையடுத்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளுடனான தொடரில் விளையாடவுள்ள நிலையில், இந்த வெற்றி ஒரு உத்வேகத்தை அளிப்பதாக இருக்கும்.
அணிகள் விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, ரிஷப் பந்த்.
மே.இ.தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷு, ரோஸ்டன் சேஸ், மிகெல் கம்மின்ஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் முகமது, ஆஷ்லே நர்ஸ், கிரன் பாவெல், ரோவ்மேன் பாவெல்.

போட்டி நேரம்: மாலை 6.30
நேரடி ஒளிபரப்பு:
டென் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com