டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இப்போ 140 வயசு: ஸ்பெஷல் டூடுல் போட்ட கூகுள்! 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடப்படத் துவங்கி 140 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இப்போ 140 வயசு: ஸ்பெஷல் டூடுல் போட்ட கூகுள்! 

சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடப்படத் துவங்கி 140 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது 1877-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்களில் வெற்றி பெற்றது.

இப்படியாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த டுளில் பந்து வீச்சாளர் ஒருவர் பந்து வீசுவது போலவும், பேட்ஸ்மேன் அதனை அடிப்பது போலவும், பீல்டர்கள் அதனை தடுக்க முயல்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com