சென்னை லீக்: சென்னை சிட்டி வெற்றி

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் சென்னை சிட்டி, சென்னை சுங்கத்துறை அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் சென்னை சிட்டி, சென்னை சுங்கத்துறை அணிகள் வெற்றி பெற்றன.
செயின்ட் ஜோசப் குழுமம்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் வியாழக்கிழமை நடைபெற்ற சீனியர் டிவிஷன் முதல் ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐசிஎப் அணியைத் தோற்கடித்தது. சென்னை சிட்டி தரப்பில் ஜோசப் இரு கோல்களையும், எட்வின் ஒரு கோலையும் அடித்தனர். ஐசிஎப் தரப்பில் பிரெட்டி ஒரு கோலடித்தார். சென்னை சிட்டி வீரர் சுநீல் குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு ஆட்டத்தில் சென்னை சுங்கத் துறை அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியைத் தோற்கடித்தது. சுங்கத் துறை தரப்பில் நிர்மல், ஜெபக்குமார், இளவரசன் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். ஸ்போர்ட்டிங் யூனியன் தரப்பில் விட்டாலிஸ் கோலடித்தார். சுங்கத் துறை வீரர் இளவரசன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய ஆட்டங்கள்
இந்தியன் வங்கி-
சென்னை எப்.சி.
நேரம்: பிற்பகல் 3
தெற்கு ரயில்வே-
வீவா சென்னை
நேரம்: மாலை 5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com