ராஞ்சி டெஸ்ட்: புஜாரா சதம்; இந்தியா-360/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 130 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்துள்ளது.
ராஞ்சி டெஸ்ட்: புஜாரா சதம்; இந்தியா-360/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 130 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 91 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா 328 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். முரளி விஜய் 183 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கிளென் மேக்ஸ்வெல் 104 ரன்கள் குவித்தார். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 42, புஜாரா 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
விஜய் 82: 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் 129 பந்துகளில் அரை சதம் கண்டார். 50-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் விஜய் அடித்த 15-ஆவது அரை சதம் இது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய விஜய், இந்தியா 193 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். 183 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்த அவர், ஓ"கீஃப் பந்துவீச்சில் சிக்ஸர் அடிப்பதற்காக கிரீûஸ விட்டு வெளியே வந்தபோது ஸ்டெம்பிங் ஆனார். விஜய்-புஜாரா ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாரா 155 பந்துகளில் அரை சதம் கண்டார். கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் ஆனார்.
புஜாரா சதம்: இதன்பிறகு வந்த அஜிங்க்ய ரஹானே 14 ரன்களில் நûடையக் கட்ட, கருண் நாயர் களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய புஜாரா 214 பந்துகளில் சதமடித்தார். இது அவர் அடித்த 11-ஆவது சதமாகும். அதேநேரத்தில் இந்தத் தொடரில் இந்தியர் ஒருவரால் அடிக்கப்பட்ட முதல் சதம் இது.
இதன்பிறகு கருண் நாயர் 47 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் போல்டாக, பின்னர் வந்த அஸ்வின் 3 ரன்களில் பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து புஜாராவுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா. இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. புஜாரா 130, ரித்திமான் சாஹா 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியத் தரப்பில் பட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


கோலியை கிண்டல் செய்த மேக்ஸ்வெல்

முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் தோளைப் பிடித்தவாறே மைதானத்தில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் 3-ஆவது நாள் ஆட்டத்தின்போது கோலியை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் தனது தோள்பட்டையை பிடித்தவாறே வலியால் துடிப்பது போன்ற சைகை செய்தார். அது குறித்து இந்திய வீரர் விஜய் கூறுகையில், "அதையெல்லாம் நாங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. போட்டியின் மீது மட்டுமே எங்கள் கவனம் உள்ளது' என்றார்.

துளிகள்...

7

இந்த சீசனில் முதல்தர கிரிக்கெட்டில் புஜாரா அடித்த 7-ஆவது சதம் இது. அதாவது டெஸ்ட் போட்டியில் 4 சதங்களையும், உள்ளூர் கிரிக்கெட்டில் 3 சதங்களையும் விளாசியுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் ஒரு சீசனில் முதல்தர கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசியவர்கள் வரிசையில் எம்.ஏ.கே. பட்டோடி (1964-65), சுநீல் கவாஸ்கர் (1978-79) ஆகியோருடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார் புஜாரா. 1999-2000 சீசனில் வி.வி.எஸ்.லட்சுமண் 8 சதங்களை விளாசியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.

2010

இந்தியாவின் முதல் 3 பேட்ஸ்மேன்கள், டெஸ்ட் போட்டியில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுப்பது 2010-க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.

6

இந்த சீசனில் முரளி விஜய்-புஜாரா ஜோடி 6-ஆவது முறையாக 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதன்மூலம் ஒரு சீசனில் அதிக முறை 100 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடிகளின் வரிசையில் விஜய்-புஜாரா ஜோடி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.


2005-06-இல் மேத்யூ ஹேடன்-ரிக்கி பாண்டிங் ஜோடி 7 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.

ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா-451 (ஸ்டீவன் ஸ்மித் 178*,
கிளென் மேக்ஸ்வெல் 104, ஜடேஜா 5வி/124,
உமேஷ் யாதவ் 3வி/106)

இந்தியா

கே.எல்.ராகுல் (சி) வேட் (பி) கம்மின்ஸ் 67 (102)
முரளி விஜய் (ஸ்டெம்பிங்) வேட் (பி) ஓ"கீஃப் 82 (183)
புஜாரா நாட் அவுட் 130 (328)
விராட் கோலி (சி) ஸ்மித் (பி) கம்மின்ஸ் 6 (23)
ரஹானே (சி) வேட் (பி) கம்மின்ஸ் 14 (33)
கருண் நாயர் (பி) ஹேஸில்வுட் 23 (47)
அஸ்வின் (சி) வேட் (பி) கம்மின்ஸ் 3 (22)
ரித்திமான் சாஹா நாட் அவுட் 18 (42)
உதிரிகள் 17

விக்கெட் வீழ்ச்சி: 1-91 (கே.எல்.ராகுல்), 2-193 (விஜய்),
3-225 (கோலி), 4-276 (ரஹானே), 5-320 (கருண்),
6-328 (அஸ்வின்).

பந்துவீச்சு: ஜோஷ் ஹேஸில்வுட் 31-9-66-1,
பட் கம்மின்ஸ் 25-8-59-4, ஸ்டீவ் ஓ"கீஃப் 43-11-117-1,
நாதன் லயன் 29-2-97-0, மேக்ஸ்வெல் 2-0-4-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com