மியாமி மாஸ்டர்ஸ்: சிலிச், டிமிட்ரோவ் அதிர்ச்சித் தோல்வி

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்திய மகிழ்ச்சியில் குய்டோ பெல்லா.
கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்திய மகிழ்ச்சியில் குய்டோ பெல்லா.

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் கிரிகோர் டிமிட்ரோவ் 3-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
மற்றொரு 2-ஆவது சுற்று ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் மரின் சிலிச் 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் டூடி செலாவையும், கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியையும் தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். ஜப்பானின் கெய் நிஷிகோரி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் பிரான்ஸின் கிறிஸ்டினா மெடினோவிச் 6-7 (4), 2-6 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் பாட்ரிஸியா டிக்கிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் லக்ஸம்பர்க்கின் மேன்டி மினெல்லாவையும், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 0-6, 7-6 (6), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மிக்கேலையும் தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com